புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2015

வில்லியம்சன் இரட்டைச் சதம் 390 ஓட்டங்கள் வெற்றி இலக்கு


வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்தின் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இலங்கை அணிக்கு 390 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு ள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்டில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், வெலிங்டனில் நடக்கிறது.

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 221, இலங்கை 356 ஓட்டங்கள் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக் கெட்டுக்கு 253 ஓட்டங்கள்  எடுத்திருந்தது.

வில்லியம்சன் (80), வாட்லிங் (48) அவுட்டாகாமல் இருந்தனர்.நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. வில்லியம்சன், வாட்லிங் ஜோடி தொடர்ந்து அசத்தியது.

வாட்லிங் சதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் டெஸ்ட் அரங்கில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 524 ஓட்டங்கள் எடுத்தபோது, ‘டிக்ளேர்’ செய்தது.

வில்லியம்சன் (242), வாட்லிங் (142) அவுட்டாகாமல் இருந்தனர்.390 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் இரண;டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணிக்கு கருணாரத்னே (17) ஏமாற்றினார்.

நான்காவது நாள் ஆட்ட முடிவில், இலங்கை அணி இரண்டாவது இன்னி ங்சில் ஒரு விக்கெட்டுக்கு 45 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சில்வா (20), தமிகா பிரசாத் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

உலக சாதனை
நியூசிலாந்தின் வில்லியம்சன், வாட்லிங் ஜோடி 365 ஓட்டங்கள் சேர்த்தனர். இதன் மூலம், டெஸ்ட் அரங்கில் 6ஆவது விக் கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் ; சேர்த்த ஜோடி என்ற சாதனை படைத்தது. இதற்கு முன் நியூசிலாந்தின் பிரண்டன் மெக் கலம், வாட்லிங் ஜோடி 352 ஓட்டங்கள் குவித்ததே அதிக பட்சமாக இருந்தது. இலங்கையின் ஜெயவர்தன, பிரசன்ன ஜெய வர்தன ஜோடி (351) மூன்றாவது இடத்தை வகிக்கிறது. போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் இன்றாகும்.           

ad

ad