முறைப்பாடு குறித்து சி.ஐ.டி. முழுமையான விசாரணை
சிரேஷ்ட சிங்கள திரைப்பட தயாரிப்பா ளரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் முகத்துக்குப் பதிலாக புலிகள் இயக்க முன்னாள்
தலைவர் கே.பி.யின். படத்தை மோசடியாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடு குறித்து சி.ஐ.டி. பல்வேறு மட்டங்களில் விசார ணை நடத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
விசேட ஊடக மாநாட்டில் எழுப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
சட்டத்தரணி டக்ளஸ் சிறிவர்தன இது தொடர்பில் சி.ஐ.டி.யில் முறையிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் திரட்டப்பட்டு வருவதோடு மேலும் தகவல்கள் திரட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.