புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2015

கனடாவில் தமிழ்ப் பெண்ணிற்கு நடந்த துயரம்… குற்றவாளியை தேடும் பொலிஸ்


கனடா, ரொறன்ரோ பகுதியில் 40 வயதான இலங்கைக் தமிழ் குடும்பப் பெண் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 ரொறன்ரோ, பிர்ச்மவுன்ட் பகுதியில் பின்ச் அவனியுவில் உள்ள தொடர்மபடிக் குடியிருப்புப் பகுதியில் குறித்த பெண் வசித்து வந்துள்ளார். தனது தொடா்மாடிக் குடியிருப்புக்கு லிப்ட்டில் சென்று கொண்டிருக்கையில், அந்த லிப்டுக்குள் வந்த இளைஞன் ஒருவா் குறித்த பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று அப் பெண் தனது வீட்டுக்குள் சென்றுள்ளார்.
இந்தநிலையில் அப்பெண்ணை கட்டி வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் அதனை தனது தொலைபேசியால் வீடியோ எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த வருடம் நவம்பர் 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த இளைஞன் இதன் பின்னர் பல தடவைகள் அப் பெண்ணை அச்சுறுத்தி பாலியல் துஸ்பிரோயகத்திற்கு உள்ளாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் கணவனைப் பிரிந்து வாழ்பவர் எனவும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர்அப் பெண்ணின் அருகே இருந்த இன்னொரு வீட்டில் வசித்து வந்த சீன யுவதியையும் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். இதனையடுத்து,  குறித்த சீனப் பெண் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது குறித்த நபரைப் பொலிசார் கைது செய்வதற்காக முயற்சித்துள்ளனர்.
குறித்த நபர்  அந்த தொடா்மாடிக் குடியிருப்புக்கு வந்து போனபோது சி.சி.ரீவி கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பொலிசார் வெளியிட்டு பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். அத்துடன் குறித்த இளைஞன் அடிக்கடி தமிழ்ப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று வந்தமை சி.சி.ரீ.வி கமெரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,  அப்பெண்ணை பொலிஸார் விசாரணை செய்தபோது, தன்னையும் அந்த இளைஞன் அச்சுறுத்தி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த பெண் இலங்கை வவுனியாவைச் சோ்ந்த தமிழப் பெண் எனவும் கடந்த 99 ஆம் ஆண்டு கனடா வந்து நிரந்தரமாக குடியிருக்கின்றார் எனவும் கூறப்படுகின்றது.
vavu 3vavu 1

2
 

ad

ad