புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2015

வன்முறையில் ஈடுபட்டால் சுடுவோம்; பொலிஸ் பேச்சாளர்

news
தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ரி-56 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தேவைப்படும் சந்தர்பங்களில் அவற்றை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
 
தேர்தல் பாதுகாப்பு தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நாளை நடைபெறள்ள ஜனாதிபதி தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக நடாத்துவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு நாம் பூரண ஆதரவைப் பெற்றுள்ளோம். 
 
இதற்காக நாடளாவிய ரீதியில் தேர்தல் கடமைகளில் 66 ஆயிரத்து 100 பொலிஸாரும் , விசேட படை அணியினர் 5ஆயிரம் பேருமாக 71 ஆயிரத்து 100 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 
மேலும் ரோந்துப் பணியை மேற்கொள்ளவும், சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை சோதனை இடுவதற்கு என 2884 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் சீருடையிலும் சாதாரண உடையிலும் நிறுத்தப்படுவர். மேலும் தேர்தல் கடமையில் ஈடுபடும் பொலிஸாருக்கு ரி- 56 ரக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. 
 
எனவே தேவை ஏற்படும் போது அவற்றைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
வாக்களிப்பவர்களுக்கு இடையூறு விளைவித்தல், கொலை நடவடிக்கை, தாக்குதல் சம்பவங்கள் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் முயற்சி என்பனவற்றின் போது பொலிஸார் துப்பாக்கியை பயன்படுத்துவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  



 வன்முறையில் ஈடுபட்டால் சுடுவோம்; பொலிஸ் பேச்சாளர் 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=129203787307507948#sthash.j9Wa26ud.dpuf

ad

ad