அவர் திருமணம் செய்துகொண்டிருப்பது மற்றொரு பெண்ணை என்பது குறிப்பிடத்தக்கது.தான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என பல வருடங்களுக்கு முன்னரே பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர் மார்ட்டினா நவரத்திலோவா.இந்நிலையில் ரஷ்யாவின் முன்னாள் அழகுராணிகளில் ஒருவரான ஜூலிய லெமிகோவாவை (42) மார்ட்டினா திரு
மணம் செய்து கொண்டுள்ளார்.
செக்கஸ்லோவாக்கியா வில் பிறந்து அமெரிக்கா வில் குடியேறிய மார்ட்டினா நவரத்திலோவா 18 ஒற்றை யர் கிராண்ட்ஸ்லாம் பட்டங் கள், 31 முக்கிய மகளிர் இரட்டை யர் பட்டங்கள், 10 கலப்பு இரட்டையர் பட்டங்கள் உட்பட 59 பட்டங்
களை வென்று சாதனை படைத்தமை
குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 1990 ஆம் ஆண்டு மிஸ் சோவியத் யூனியன் அழகுராணியாக தெரிவான ஜூலியா, 1991 ஆம் ஆண்டு மிஸ் யூ
னிவர்ஸ் போட்டியில் பங்குபற்றி 3 ஆம் இடத்தைப் பெற்றவர்.சோவியத் அழகுராணியாக தெரிவான பின்னர் மேற்கு ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்த ஜூலியா, பிரான் ஸின் தலைநகர் பாரிஸில் வசிக்க ஆரம்பித்தார்.அங்கு அழகுசாதன பொருட்கள் வர்த்தக நிறுவனமொன்றையும் அவர் ஸ்தாபி த்தார்.
1997 ஆம் ஆண்டு பிரான்ஸின் செல்வந்த வங்கி அதிகாரிகளில் ஒருவரான எடோர்ட் ஸ்டேர்னை காதலிக்க ஆரம்பித்த ஜூலியா லெமிகோவா 1999 ஆம் ஆண்டு ஆண் குழந்தையொன்றுக்கு தாயானார்.அக்குழந்தையின் தந்தை யார் என்பது தொடர்பாக ஜூலியாவுக்கும் ஸ்டேர்னுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதேவேளை 6 மாத வயதில் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக அக்குழந்தை இறந்தது.அவ்வேளையில் ஸ்டேர்னின் பாதுகாப்பில் அக்குழந்தை இருந்ததாக கூறப்படுகிறது.
2005 ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள எடோர்ட் ஸ்டேர்னின் தொடர்மாடி குடியிருப்பில் ஸ்டேர்ன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.விபசாரி ஒருவரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.அதன் பின்னர் இரு பெண் குழந்தைகளுக்கு ஜூலியா லெமிகோவா தயானார். அக்குழந்தைகளின் தந்தை யார் என்பது அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் 1997 ஆம் ஆண்டு டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவாவும் ஜூலியா லெமிகோவாவுக்கும் இடை
யில் ஒரு பாலினக் காதல் ஏற்படத் தொடங்கியது.நீண்டகாலமாக காதலித்து வந்த இவ்விருவரும் கடந்த மாதம் 15 ஆம் திகதி நியூயோர்க்கில் வைத்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். தான் ரஷ்யாவில் இருந்த காலத்தில் ஒரு பாலினத் திருமணம் குறித்து கேள்விப்பட்டிருக்கவில்லை என ஜூலியா கூறுகிறார். “நான் லண்டனுக்கு இடம்பெயர்ந்தபோது 17, 18 வயதாக இருந்தது.அதுவரை உலகில் ஒருபாலின உறவுகள் குறித்து நான் அறிந்திருக்கவில்லை” என்கிறார் ஜூலியா.ஆனால் இப்போது அவரே ஒருபாலின திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இத் திருமணத்துக்காக தனது இரு மகள்களான விக்டோரியா (13), எம்மா (8) ஆகியோரின் சம்மதத்தைப் பெறுவதற்காக கடும் பிரயத்தனம் மேற்கொண்டாராம் ஜூலியா.உங்களுக்கு ஒரு புது தாய் கிடைக்கப் போகிறார் என தனது மகள்களி டம் ஜூலியா கூறினாராம்.
மார்ட்டினாவும் ஜூலியாவும் ஆங்கிலத்தில் உரையாடுகின்ற போதிலும் ஜூலியாவின் மகள் கள் பிரெஞ்சு மொழிபேசுபவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது
மார்ட்டினாவும் ஜூலியாவும் ஆங்கிலத்தில் உரையாடுகின்ற போதிலும் ஜூலியாவின் மகள் கள் பிரெஞ்சு மொழிபேசுபவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது