புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2015

ஒரு பந்தில் 7 ஓட்டங்கள்: உலக சாதனை படைத்த கிரேக் பிராத்வெய்ட்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட் ஒரே ஒரு பந்தில் உலக சாதனை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா- மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நியூலேன்ட்ஸ்
மைதானத்தில் நடந்தது. அந்தப் போட்டியில் தான் இந்த சுவாரஸ்யமான உலக சாதனை அரங்கேறியது.
தனக்கு வந்த பந்தை வேகமாக அடித்து விரட்டிய பிராத்வெய்ட், உடனடியாக ஓட்டங்கள் எடுக்க ஓடினார். அப்படி ஓடியே 3 ஓட்டங்களை எடுத்து விட்டார்.
அந்த சமயம் பந்தை வசப்படுத்திய தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஏப் டிவில்லியர்ஸ், அதை ஸ்டம்ப்பை நோக்கி வீசினார்.
சற்று வேகமாக வீசியதால் பந்து ஸ்டம்பில் படாமல் பவுண்டரி லைனை நோக்கி ஓடிக் கடந்து விட்டது. இதனால் பிராத்வெய்ட்டுக்கு 7 ஓட்டங்கள் கிடைத்து விட்டன.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரே பந்தில் 7 ஓட்டங்கள் எடுத்த சம்பவம் இப்போது தான் நடந்துள்ளது. அந்த வகையில் இது சாதனையாகும் என்று ஆப்பிரிக்க கிரிக்கெட் புள்ளிவிவர நிபுணர் ஆண்ட்ரூ சாம்சன் தெரிவித்துள்ளார்.
உலக சாதனை படைத்த பிராத்வெய்ட் 165 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்று விட்டது குறிப்பிடத்தக்கது.

ad

ad