திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியும், சுதந்திர தின பாடல்களும் கவிதைகளும் எழுதியதற்க்காக கலிபோர்னியா அரசால் டாக்டர் பட்டம் பெற்றவரும் ,நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் நண்பருமான டாக்டர் கே.எஸ்.முகமது தாவுது நேற்று மாலை முத்துப்பேட்டையில் காலமானார்.
அவரது நல்லடக்கம் இன்று காலை 11 க்கு நடைப்பெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தாசில்தார் மதியழகன், மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்துக்கொண்டனர்.