திங்கள், ஏப்ரல் 06, 2015

அரசியல்வாதிகளே பங்கேற்காதீர்கள் : தூய நீருக்கான கவனயீர்ப்பு போராட்டம் நாளை


அரசியல்வாதிகளே பங்கேற்காதீர்கள் என்ற கோரிக்கையுடன் கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட வலிகாமப் பிரதேச மக்கள் நல்லூர் ஆலய முன்றலில் நாளை செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
 
 தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் எவரையும் கலந்து கொள்ளவேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளது.
 
 நாளை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போராட்டத்தின் முடிவில் மக்கள் பேரணியாக சென்று வட மாகாண முதலமைச்சர், ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜர்களை கையளிக்கவுள்ளனர். 
 
மேலும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பிரிவினைகளின்றி அனைத்து மக்களும், மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தூய நீருக்கான மக்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.