புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஏப்., 2015

மீள்குடியேறிய மக்களின் வீட்டுத்தேவைகள் தொடர்பில் சாதகமான முடிவை பெற்றுத்தருவோம் : உறுதியளித்தார் றொபின் மூடி


அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடிக்கும் யாழ்.மாட்ட அரச அதிபர் வேதநாயகம்  இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
 
குறித்த சந்திப்பில் றொபின் மூடி குடாநாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், அரசியல் மாற்றங்கள் குறித்தும் அரச அதிபருடன் கலந்துரையாடினார்.
 
அதுமட்டுமல்லாது மீள்குடியேற்றம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
 
அதற்கு அரச அதிபர் மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படைத் தேவையாக வீட்டுத்தேவைகள் உண்டு.எனவே வீட்டுத்திட்டம் தொடர்பில் உங்களால் முடிந்த உதவிகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
 
 
அதற்கு றொபின் மூடி  மீள்குடியேறிய மக்களின் வீட்டுத்திட்டம் தொடர்பில் ஆராய்ந்து அதற்குரிய சாதகமான முடிவை பெற்றுத் தருவதாக ஆளுநரிடம் உறுதியளித்தார்.