புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஏப்., 2015

19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு கிடைக்காவிட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படும்: ஐ.தே.க


19ம் திருத்தச் சட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காவிட்டால் நாடாளுமன்றை கலைப்பதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி முழு அளவில் அர்ப்பணிப்புடன் செயற்படும்.
எதிர்வரும் 9ம், 10ம் திகதிகளில் குறித்த 19ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளினால் பரிந்துரை செய்யப்பட்ட சில திருத்தங்கள் 19ம் திருத்தச் சட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளது.
அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்ய மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.
அந்த ஆணையின் அடிப்படையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது என கபீர் ஹசிம் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.