புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஏப்., 2015

யேமனிலிருந்து இலங்கையர்கள் வெளியேற முடியாத நிலை


யேமனிலிருந்து 43 இலங்கையர்கள் வெளியேற முடியாது நெருக்கடியான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையிலுள்ள அதிகாரிகளின் எந்தவித தொடர்புகளும் இல்லாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையர்கள் கப்பல் ஒன்றின் ஊடாக நாடு திரும்புவதற்கு யேமன் தலைநகர் சனாவில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கோடேடா துறைமுகத்திற்கு சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
யேமனில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள 43 இலங்ககையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாக தற்போது நடைபெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.