புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஏப்., 2015

வடகொரியாவின் அறிவிப்பால் நடுங்கும் தென்கொரியா: தீபகற்பத்தில் நிலவும் பதற்றம் (வீடியோ இணைப்பு)


கிழக்கு கடற்பகுதியில் கப்பல் செல்லவேண்டாம் என வடகொரியா விடுத்துள்ள எச்சரிக்கையால் தென் கொரியா பீதியில் உறைந்துள்ளது.
1300 கி.மீ. மத்திய தர ஏவுகணையான ரோடாங்(Rodang) ஏவுகணையை வீச, வட கொரியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த 1ம் திகதி முதல் தங்கள் நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் பிற நாட்டு கப்பல்கள் பயணிக்கக்கூடாது என வடகொரியா அறிவித்துள்ளது.
வடகொரியாவின் இந்த திடீர் அறிவிப்பு கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன், தென் கொரியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இவ்வாறு தொடர்ந்து ஏவுகணைகள் வீசுவதன் மூலம், ஆண்டுதோறும் அமெரிக்காவும், தங்கள் நாடும் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சியை வட கொரியா தடுக்க முயல்வதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.