புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஏப்., 2015

பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு அதிரடி தடை: காரணம் என்ன?


துருக்கி நாட்டில் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட 166 சமூக வலைதளங்களை அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி, துருக்கியின் இஸ்தான்புல்(Istanbul)நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த இடது சாரி அமைப்பை சேர்ந்த ஒருவன் Mehmet Selim Kiraz என்ற வழக்கறிஞரை பிணையக்கைதியாக சிறைப்பிடித்தான்.
வழக்கறிஞரை துப்பாக்கி முனையில் பிணையக்கைதியாக பிடித்து அதை புகைப்படங்கள் எடுத்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டான்.
இந்த புகைப்படங்களில் முகத்தை மறைக்காமல் அப்படியே பல இணையதளங்கள் வெளியிட்டன.
சிறிது நேரத்திற்கு பிறகு, வழக்கறிஞர் 5 முறை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
இதனிடையில் நீதிமன்றத்திற்குள் புகுந்த துருக்கி ராணுவ வீரர்கள், வழக்கறிஞரை கொன்ற நபரை சுட்டுக்கொன்றனர்.
நீதிமன்றத்திற்குள் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வழக்கறிஞர் படங்களை பல சமூக வலைதளங்கள் வெளியிட்டது பாதுகாப்பு அம்சம் குறித்து சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், புகைப்படங்களை வெளியிட்ட பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட 166 இணையதளங்களுக்கு தடை விதித்திருப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துருக்கியின் Internet Service Providers Union (ESB) சங்கத்தின் பொதுச்செயலாளரான Bülent Kent பேசுகையில், வழக்கறிஞரின் புகைப்படங்களை வெளியிட்ட இணையதளங்களுக்கு இன்று முதல்(06.04.15) அரசு தடை விதித்துள்ளது என்றும் இதை இணையதள சேவைகளை வழங்கும் அனைவரும் அமுல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.