புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஏப்., 2015

ஜனாதிபதி மைத்திரி நேற்று பாகிஸ்தான் விஜயம்;; நவாஸ் n'ரீபுடன் இன்று பேச்சு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான்,
தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமவீர, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, வாணிப, கைத்தொழில் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகிஸ்வர பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ் தானிகர் எயார் சீப் மார்சல் ஜயலத் வீரக்கொடி, இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.டபிள்யு.ஜே.சி.த சில்வா ஆகியோரும் இவ்விஜயத்தில் இடம் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை இன்று இலங்கை ஜனாதிபதி சந்திப்பார். காலை 10.55 மணிக்கு பிரதமரின் வாசஸ் தளத்தில் இடம்பெறும். பாகிஸ்தான் ஜனாதிபதி மஹ்மூத் ஹ¥சைனையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் பிரதமருடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதோடு பல ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட உள்ளார். ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட பின்னர் பாகிஸ்தான் பிரதமர் வழங்கும் பகற்போசன விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வார்.
பாகிஸ்தான் சபாநாயகர் ஹயாஸ் சித்தீக், பாதுகாப்பு அமைச்சர் ஹவாஜா மொஹமட் அசிப், வர்த்தக அமைச்சர் குராம் தஸ்தகிர்கான் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
இன்று ஜனாதிபதி மஹ்மூத் ஹ¥சைன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவுக்கு இதனை முன்னிட்டு இராப்போசன விருந்து அளித்துக் கெளரவிப்பர்.
இஸ்லாமாபாத் தலைநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன் இலங்கை, பாகிஸ்தான் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தான் ஜனாதிபதி மஹ்மூத் ஹ¥சைன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரின் பெரியளவிலான உருவப்படங்கள் பாகிஸ்தானின் வீதியெங்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அங்குள்ள சகல பத்திரிகைகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயம் குறித்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பி.ரி.வி., துன்யா ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஜனாதிபதியின் விஜயத்துக்கு முக்கியத்துவம் அளித்து செய்திகளை ஒளிபரப்பின.
பாதையின் இருமருங்கிலும் கொடிகள் பறக்கவிடப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தன