புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2015

சயீட் அஜ் மலின் இடைவெளியை நிரப்ப குறுகிய கால மாற்று வீரராக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்க
இங்கிலாந்தின் வொர்சஸ்டர்'யர் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
அடுத்த வாரம் ஆரம்பமாகும் பாகிஸ்தான் அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் 37 வயது அஜ் மல் இணைக்கப்பட்டதை அடுத்து அவரால் இங்கிலாந்து கழக போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
"சேனாநாயக்க அணியில் இணைப்பட்டதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் ஒரு சர்வதேச வீரர் என் பதை நிரூபித்திருக்கிறார்" என்று வொர்சஸ்டர்'யர் இயக் குனர் ஸ்டிவ் ரோட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
30 வயதான சேனாநாயக்க இலங்கைக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடந்த பருவத்தில் நடந்த இங்கிலாந்துடனான தொட ரில் சேனாநாயக்க இலங்கை அணியில் இடம்பிடித்தி ருந்தார். எனினும் முறையற்ற பந்துவீச்சு காரணமாக அவர் கடந்த ஜ{லையில் பந்துவீச தடை விதிக்கப்பட்டார். எனினும் தனது பந்துவீச்சில் திருத்தம் கொண்டுவந்து ஐ.சி.சியின் மீள் சோதனைக்கு உள்ளான சேனாநாயக்க தடையில் இருந்து விடுபட்டு கடந்த டிசம்பரில் மீண்டும் அணிக்கு திரும்பினார்.
சேனாநாயக்கவுக்கு இதுவரை இங்கிலாந்து முதல்தரப் போட்டிகளில் விளையாடிய அனு பவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. "சுழற்பந்து வீச் சாளராக சயிட் அஜ் மல் பல ஓவர்களை வீசிய நிலையில் கடந்த ஆண்டு நாம் சமநிலையான அணி யாக சிறப்பாக செயற்பட்டோம்" என்று ரோட்ஸ் குறிப்பிட்டார்.
"போட்டியை இறுக்கமாக வைத் திருப்பது விக்கெட்டுகளை வீழ்த் துவது குறித்து அவர் சிறந்த முறை யில் செயற்பாட்டார். நம்பிக்கைக் குரிய வீரரான சேனாநாயக்க விடம் இருந்தும் எம்மால் அதனை எதிர்பார்க்க முடியும். அவர் நான்கு நாள் போட்டிகளில் திறமையை நிரூபிப்பதற்கு எதிர்பார்த்திருப்ப வர். ஏனென்றால் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க அவர் முயற்சித்து வருப வர்" என்றும் ரோட்ஸ் தெரிவித்தார்.
எனினும் சேனாநாயக்க இங்கி லாந்து கழக போட்டியில் விளை யாடுவது விசா அனுமதி மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் தடை யில்லா சான்றிதழிலேயே தங் கியுள்ளது.

ad

ad