புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2015

நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் அமர 25 பேருக்கு ஜனாதிபதி அனுமதி


நாடாளுமன்றத்தினுள் எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் உட்பட 25 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் அமர்வது தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதியினால் இவ் அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் இணையாத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 25 பேர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று கொழும்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அலகபெரும, மஹிந்தானந்த அலுத்கமகே, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கமவின் முழுமையான பங்களிப்பின் கீழ் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்கள் என ரஞ்சித் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

ad

ad