புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2015

வடக்கு மாகாணத்தில் உள்ள பழுதடைந்த வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்காக ரூபா 136 மில்லியன் நிதி

வடக்கு மாகாணத்தில் உள்ள பழுதடைந்த வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்காக ரூபா 136 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண வீதி அபிவிருத்தி
அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஆண்டான்குளம், கருங்காலித்தாழ்வு, குமானயங் குளம், ஆலய வீதி என்பவற்றை புனரமைப்புச் செய்வதற்கான வேலைத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அது தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக இந்த வீதிகள்  புனரமைக்கப்படாத நிலையில் உள்ளன என்று நான் கருதுகிறேன். இலங்கை சுதந்திரம் அடைந்த கால கட்டத்தின் பின்னர் இன்றுவரை கண்டு கொள்ளப்படாமலே அவை இருந்துள்ளன. இவற்றைக் கருத் தில் கொண்டே ரூபா 25 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மூன்று வீதிகளைப் புனரமைப்புச் செய்யவுள்ளோம். இதற்கான பணிகள் இரண்டு மாத காலத்தில் முடிவடைந்துவிடும் ன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் பிரதேசத்தில் எட்டுக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளனர். தமது விவசாய நிலங்களைச் சென்றடைய ஒரே வீதி இதுதான். விவசாயம் தொடர்பான ஊர்திகளைப் பயன்படுத்துவதற்காக சீரான வீதி ஒன்றை அமைத்துத்தர வேண்டும் என மூன்று மாதங்களில் முன்பு குறித்த பிரதேச வாசிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் ரூபா 36 லட்சம் யாழ். மாவட்டத் துக்கும், ஏனைய நான்கு மாவட்டங்களுக்கு தலா 25 லட்சம் வீதமும் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. வீதிப் புனரமைப்பு தொடர்பான பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன. இவை குறித்த நிதியினூடாக நிறைவேற்றப்படும். யாழ். மாவட்டத்தில் முதற்கட்டமாக அல்லிக் குளம் வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ad

ad