புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2015

உலகை உலுக்கிய சிறுவன் மரணம்: உதவிக்கரம் நீட்டிய ஜேர்மன் உதைப்பந்தாட்ட அணி

migrant_child_001
சிரியாவின் உள்நாட்டுப்போர் காரணமாக அகதிகளாக வெளியேறும்  மக்களுக்கு ஜேர்மனியின்  உதைப்பந்தாட்ட  அணி மற்றும் ரசிகர்கள் உதவிக்கரம்
நீட்ட முன்வந்துள்ளனர்.
சிரியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் நிலையில், அங்கு வசிப்பவர்கள் அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், துருக்கி நாட்டின் கடற்கரையில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.
இதில் கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது சிறுவன் அய்லானின் உடலை கடல் அலைகள் தொட்டு செல்லும் புகைப்படம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்தப் புகைப்படம் வெளியானதுமே, ஜேர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து அணியான பேயர்ன்மியூனிச், அங்கு வரும் அகதிகளுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு உதவி செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், ஜேர்மனியில் ஏற்கனவே உள்ள அகதிகள் நல்வாழ்விற்காகவும், அவர்களது குழந்தைகளின் படிப்பிற்காக உதவவும் பேயர்ன்மியூனிச் அணி முன்வந்துள்ளது.
இதற்காக நட்புமுறையிலான போட்டிகளில் பங்கேற்று, அதில் வரும் நிதியையும் அகதிகள் நல்வாழ்வுக்காக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ad

ad