புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2015

தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை: வைகோகூட்டணி, முதல்வர் வேட்பாளர் குறித்து வைகோ பேச்சுமதிமுக

 மாநில மாநாடு, அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

மாநாட்டில் பேசிய வைகோ, மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தித் திணிப்பு செயலில் ஈடுபடுகிறது. ஐ.நா. சபையில் இந்தியை அலுவல் மொழியாக்க முயற்சிக்கிறது. ஐ.நா. சபையில் அலுவல் மொழியாக்க தகுதியுடைய ஒரே மொழி தமிழ் மட்டுமே. இதுதவிர, கல்வித்துறையில் சமஸ்கிருதத்தை திணிக்கிறது. இன்றைய சூழலில் இந்தியாவில் கல்வித்துறை காவித்துறையாக மாறிக் கொண்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு சுதந்திர தமிழ் ஈழம் மட்டுமே. அங்கு நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுடனும் மதிமுக கூட்டணி வைக்காது. இரண்டு கட்சிகளுமே ஊழலில் திளைத்துப் போயுள்ளன. இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ள மக்கள் நலக் கூட்டியக்கத்துடன் எங்களது கூட்டணி இருக்கும். மக்கள் நலக் கூட்டியக்கத்தில் மனித நேய மக்கள் கட்சி சேர வேண்டும். எங்களது கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தல் வெற்றிக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றார்.

ம.தி.மு.க., மண்டல மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை. மக்கள் நலன் காக்கும் இயக்கத்துடன் கூட்டணி தொடரும். தேர்தலுக்கு பின்னர் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.

மதிமுக மாநில மாநாடு, அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

ad

ad