16 செப்., 2015

அரச அதிபர் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தின் முடிவுகள்வேலணைநெடுந்தீவு பிரதேச செயலக அணிவெற்றி

யாழ். மாவட்ட செயலகத்தின் நலன்புரி கழகத்தினால் பிரதேச செயலகங்களுக்கு இடையில் நடத்தப்பட்டு வரும் அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்துக்கான உதைபந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியது.
குறித்த தொடரின் லீக் ஆட்டங் களில் வெற்றி பெற்ற அணிகளின் விவரங்கள் வருமாறு – சண்டிலிப்பாய் பிரதேச செயல அணிக்கும் காரைநகர் பிரதேச செயலக அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி 7:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
பருத்தித்துறை பிரதேச செயலக அணிக்கும் சாவகச்சேரி பிரதேச செயலக அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் இரண்டு அணியினரும் ஆட்ட நேர முடிவில் எதுவித கோல்களையும் பெறாததனால் ஆட்டம்  சமநிலை யில் முடிந்தது. சமநிலைதகர்ப்பு உதைகளில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
யாழ். மாவட்ட செயலக அணிக்கும் ஊர்காவற்துறை பிரதேச செயலக அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் யாழ். மாவட்ட செயலக அணி 1:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
தெல்லிப்பழை பிரதேச செயலக அணிக்கும் சங்கானை பிரதேச செயலக அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலக அணி 2:0 என்ற கோல்கணக் கில் வெற்றி பெற்றது.
யாழ். பிரதேச செயலக அணியை எதிர்த்து நல்லூர் பிரதேச செயலக அணி மோதிக்கொண்ட ஆட்டத்தில்  நல்லூர் பிரதேச செயலக அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மருதங்கேணி பிரதேச செயலக அணியை எதிர்த்து கோப்பாய் பிரதேச செயலக அணி மோதிக் கொண்ட ஆட்டத்தில் மருதங்கேணி பிரதேச செயலக அணி 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கரவெட்டி பிரதேச செயலக அணியை எதிர்த்து வேலணை பிரதேச செயலக அணி மோதிக்கொண்ட ஆட்டத்தில் வேலணை பிரதேச செயலக அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
நெடுந்தீவு பிரதேச செயலக அணியை எதிர்த்து உடுவில் பிரதேச செயலக அணி மோதிக்கொண்ட ஆட்டத்தில்  3:0 என்ற கோல் கணக்கில்  பெற்றது.