புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2015

உடுப்பிட்டி இமையாணன் பகுதியில்கடத்தப்பட்ட மணப்பெண் வீடு திரும்பினார்: மூவர் கைது

உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட வெளிநாட்டு மணப்பெண் நேற்று இரவு கடத்தபட்டோரால் பெண்ணின் வீ
ட்டில் விடப்பட்டார்.

இதனைதொடர்ந்து இக்கடத்தலுக்கு உடந்தையாக  இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டிதுறை பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
கனடா நாட்டில் இருந்து வந்த 28 வயது யுவதிக்கு திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்லையில் நேற்று முன்தினம் இரவு குறித்த யுவதி வீட்டிற்குள் இருந்த வேளை ஹயஸ் வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் வீட்டில் இருந்தோரை தாக்கி விட்டு மணப்பெண்னை கடத்திச் சென்றுள்ளனர்.

வந்தவர்கள் கறுப்பு துணியினால் தமது முகத்தை மூடிக்கட்டியிருந்தனர் என்று உறவினர்கள் வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். 

இந்நிலையில் குறித்த பெண் நேற்று இரவு கடத்தப்பட்ட வீட்டிலேயே இனந்தெரியாதோரால் கொண்டு வந்து விடப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் இக்கடத்தலுக்கு உடந்தையாக செயற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை முன்னைய காதல் விவகாரமே இந்த கடத்தலுக்கு காரணமாக இருந்துள்ளது என முதற்கட்ட விசாரனையின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் இது தொடர்பான மேலதிக விசாரனைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ad

ad