புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

1990ம் ஆண்டு காணாமல்போனவர்கள் மண்டைதீவு கிணறுகளில் போடப்பட்டதாக தகவல்! நபரொருவர் சாட்சியம்


யாழ்.தீவகம் பகுதியில் 1990ம் ஆண்டு தொடக்கம் காணாமல்போனவர்கள், படையினர் பிடித்துச் சென்றவர்கள் படுகொலை செய்யப்பட்டு மண்டைதீவில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டதாக தகவல், அந்தக் கிணற்றை சோதனை செய்யுங்கள். ஒருவேளை காணாமல்போனவர்கள் பலர் கொல்லப்பட்டு அதற்குள் போடப்பட்டிருக்கலாம்.
மேற்கண்டவாறு வே.பேரின்பநாயகம் என்பவர் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளார்.
தனது சகோதரியின் மகன் தே.சாந்தலிங்கம் என்ற இளைஞன் 1990ம் ஆண்டு மண்கும்பான் பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட சாட்சியத்தை ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மண்டைதீவில் உள்ள 3 கிணறுகளில் காணாமல் போனவர்கள், படையினரால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டு போடப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. அந்தக் கிணறுகளில் ஒன்றை முன்னர் தோண்டிய போதும் மற்றைறய கிணறுகள் எவையும் தோண்டப்படவில்லை.
எனவே அவற்றை தோண்டினால் பல உன்மைகள் தெரியவரும் என அவர் தனது சாட்சியத்தின்போது குறிப்பிட்டிருக்கின்றார்.

ad

ad