புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

இன்றைய மோதல்கள்- 2016.02.29றோயல் வி.கழகத் தொடர்

றோயல் வி.கழகத் தொடர்
ஊரெழு றோயல் விளையாட் டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூ
ரி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து ஊரெழு றோயல் அணி மோதவுள்ளது.
குணபாலசிங்கம் ஞாபகார்த்தத்தொடர்
யாழ். கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் குணபாலசிங்கம் குடும்பத்தினர் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து குண பாலசிங்கம் கிண்ணத்துக்காக 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் அணிகளுக்கு இடையில் நடத்தும் 7 வீரர்கள் பங்குபற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூரியின் மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன.
இந்தத் தொடரில் இன்று திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் பாசையூர் சென். அன்ரனிஸ் அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணி மோதவுள்ளது.
யங்ஸ்ரார் வி.கழகத் தொடர்
வவுனியா வைரவ புளியங் குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் வவுனியா கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் அணிக ளுக்கு இடையில் நடத்தும் சாந்தன், யூட், கயன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான லீக் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா வைரவ புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு இடம் பெறும் ஆட்டத்தில் மருதநிலா அணியை எதிர்த்து அல் இக்பால் அணி மோதவுள்ளது.

ad

ad