புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

29 பிப்., 2016

பிரபல எழுத்தாளர் செங்கைஆழியான் காலமானார்.

பிரபல எழுத்தாளரும், ஒய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான செங்கைஆழியான் என அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா இன்று காலமானார்.
அவருக்கு வயது 75ஆகும்.
யாழ்ப்பாணம் பிரௌன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று நண்பகல் காலமானார்.
1983 இல் இவரது கிடுகுவேலி என்னும்  நாவல்  எஸ் எஸ்  குகநாதனின் ரஜினி பதிப்பக  வெளியீடாக வந்த பொது  நான்  அதன்  விநியோகஸ்தராக  இருந்துள்ளேன் 
புவியியல்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற குணராசா புவியியல் பாடநூல்கள் பலவற்றை எழுதியதுடன் பல தொடர்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என ஆக்க இலக்கியங்களையும் படைத்துள்ளார்.
வீரகேசரி வெளியீடாக வெளிவந்த வாடைக்காற்று நாவல் பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. அது தவிர சிரித்திரன், வீரகேசரி தினகரன் ஆகியவற்றில் தொடர்கதைகளையும் எழுதியுள்ளார்.
வீரகேசரி வெளியீடாக 10க்கு மேற்பட்ட இவரின் நாவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதியாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளராகவும் இவர் பணியாற்றினார்.