புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

மேட் மேக்ஸ்': ஏன் 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது?

காடமி திரைப்பட விழாவில் ஆறு விருதுகளை அள்ளி அசத்தியுள்ளது ‘மேட் மேக்ஸ்: ப்யூரி ரோட்’ திரைப்படம்.

சினிமா உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு 6 விருதுகளை அள்ளியது மேட் மேக்ஸ். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தி ரெவணன்ட்'  படத்தை விட, அதிக விருதுகளை அள்ளி குவித்திருக்கிறது. கடினமான உழைப்பிற்கும் அர்ப்பணிப்புணர்வுக்கும் கிடைத்த அசாத்திய வெற்றி இது. முதன் முதலாக ஆஸ்கர் விருதுகளை வியக்க வைத்த ஆஸ்திரேலிய படம் இது.
'ஃப்யூரி ரோட் ' என்னும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படம்,  கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கத் திட்டமிடப்பட்டது. எனினும் ஆஸ்திரேலிய பாலைவனப் பகுதியில் பொழிந்த கனமழையால் படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டே இருந்தது.  காட்டுமிராண்டித்தனம் சுழன்றடிக்கும் கதைக்கு பாலைவனப்பகுதியில் தான் படம்பிடிக்க முடியுமென்பதால், சுமார் 3 ஆண்டுகள் காத்திருந்தார் இயக்குனர் ஜார்ஜ் மில்லர். பாலைவனப் பகுதியில் கடுமையான போராட்டத்திற்கு பின்,  கடந்த ஆண்டு வெளியான இந்த படம் 377 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.

அழிந்துவரும் ஆஸ்திரேலிய நாகரீகத்தின் நடுவே, தனது குடும்பத்தை அழித்தவர்களைப் பழிவாங்கவும், தனது நாகரீகத்தைக் காப்பாற்றவும் பயணிக்கும் கதாநாயகன் மேக்ஸ் ரோகடான்ஸ்கியைச் (  டாம் ஹார்டி)  சுற்றிதான் கதை களம் அமைக்கப்பட்டது.
மேட்மேக்ஸ் படத்தின் கதை இதுதான். தண்ணீர் இருக்கும் இடத்தில் சில ஆயிரம் மனிதர்கள் வாழ்கிறார்கள். அங்கு ஆட்சி புரிபவன் கொடுங்கோலனாக இருக்கிறான். கதாநாயகன் மேக்ஸ் உள்பட அனைவரும் அவனுக்கு அடிமையாக ஏவல் புரிகின்றனர். பாலைவனத்தில் தண்ணீர்தானே வாழ்க்கை. பாலைவனத்தில் மட்டுமல்ல எந்த மண்ணிலும் தண்ணீரின்றி அமையாது உலகு. 

இந்த சமயத்தில் அதே பாலைவனத்தின் மற்றொரு இடத்தில் தண்ணீர் கிடைப்பதாக தகவல் கிடைக்கிறது. இதையடுத்து கதாநாயகனுடன் சிலர் தப்பி சென்று, அங்கு தண்ணீரைத் தேடுகிறார்கள். சென்ற இடத்தில் தண்ணீர் இல்லை. அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மற்றொரு இடத்திற்கு சென்றால் தண்ணீர் கிடைக்கும் என்று ஒருவர் சொல்கிறார். யாருக்கும் எங்கும் போவதற்கு உடலில் தெம்பு இல்லை. அதே வேளையில் அங்கு சென்றாலும் தண்ணீர் கிடைத்து விடும் என்பதும் நிச்சயம் இல்லை.
அந்த கொடூர பாலைவனத்தில் தண்ணீர் ஒரே ஒரு இடத்தில்தான் இருக்கிறது. கொடுங்ககோலனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில்தான் தண்ணீர் இருக்கிறது. அனைவரும் ஒரு முடிவு எடுக்கின்றனர். அதாவது கொடுங்கோலனிடம் திரும்புவது என்று.  வேறு இடத்திற்கு சென்று தண்ணீரை தேடுவதை கைவிடுகிறது கதாநாயகனின் படை.  கொடுங்கோலனின் ஆட்சிக்குட்பட்ட இடத்துக்கு திரும்பி அவனைத் திட்டமிட்டு வீழ்த்துகின்றனர். தங்கள் மண்ணில் சந்தோஷமாக வாழ்கின்றனர். 

வாழ்வதற்கு என்று அழகான பூமியை கொடுத்தால், அதனை கெடுத்து விட்டு செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராயாதே என்பதே 'மேட் மேக்ஸ் ' படம் சொல்லும் சொல்லும் நீதி.

ad

ad