-

29 பிப்., 2016

ஹரிஸ்ணவி கொலை சந்தேகநபர் சார்பாக நீதிமன்றில் ஆஜராக மறுத்த சட்டத்தரணிகள்!

வவுனியாவில் கடந்த 16ஆம் திகதி கொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவி தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராக முன்வரவில்லை என தெரியவருகிறது.
கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 35 வயதான குடும்பஸ்தரை வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாக வவுனியாவில் உள்ள சட்டத்தரணிகளை சந்தேக நபரின் உறவினர்கள் நாடிய போதும் அவர்கள் ஆஜராவதற்கு முன்வரவில்லை என சந்தேக நபரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad