புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

T20 போட்டியில் முதன் முறையாக பங்களாதேஷிடம் தோற்ற இலங்கை அணி!


கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி முதற் முறையாக இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது.


இதன் காரணமாக, எதிர் வரும் போட்டிகளில் இலங்கை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இந்நிலையில், இன்றைய போட்டியில் காயம் காரணமாக லசித் மலிங்க விளையாடாத போதும் பங்களாதேஷ் அணிக்கு  ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.
இலங்கை அணியின் அதிரடியான பந்து வீச்சசில் 4.5 ஓவரில் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும், அதை தொடர்ந்து களம் இறங்கிய ஷகிப் அல் ஹசனுடன் மற்றும் சப்பீர் ரகுமான் ஆகியோர்  இணைந்து 4ஆவது விக்கெட்டுக்காக 82 ஓட்டங்களை பெற்றனர்.
இதில் சப்பீர் ரகுமான் 80 ஓட்டங்களை அணிக்காக பெற்று கொடுத்தார்.
பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், குலசேகர மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் தலா ஒவ்வொறு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணி 76 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், தினேஷ் சந்திமால் ஆட்டமிழப்பிக்கு பின் பங்களாதேஷ்ஷின் அதிரடியான பந்து வீச்சில் இலங்கை அணி தடுமாற தொடங்கியது.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்கள் மாத்திரமே இலங்கை அணியால் பெற முடிந்தது.
பங்களாதேஷ் அணி சார்பில் சிறப்பாக பந்து விசிய அல்-அமீன் ஹொசைன் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இன்றை போட்டியின் ஆட்ட நாயகனாக சப்பீர் ரகுமான் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, இந்த வெற்றியின் மூலம் இரண்டு புள்ளிகளை பெற்ற பங்களாதேஷ் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad