புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

சுவிஸ் வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியீடு! அகதிகளை வெளியேற்றுவது தொடர்பான வாக்கெடுப்பு தோல்வி58.84வீதம்

கோட்டார்ட் இரண்டாவது குகை  அமைப்புக்கு ஆதரவு .மற்றும் பேரனின் பிரதிநிதியாக எஸ் பி கட்சி அம்மான்   வெற்றி ஆதரவாக அதிகூடிய வாக்குகள் பாசல் மாநகர மாநிலம் .எதிராக வாக்களித்த  மாநிலன்=கள்
சுவிட்சர்லாந்தில், குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வகையில் நடைபெற்றுவரும் வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் நாடுகடத்த வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர்.சட்டத்துக்கு எதிராக  அதிகூடிய வாக்குகள் பாசல் மாநகர மாநிலம்70.2 .ஆதரவாக வாக்களித்த  மாநிலங் கள் ஊரி.சுவைச்,ஒபெர்வால்டேன், நீதர்வால்டன் ,அப்பன்செல் இன்னேரோத்,டேசின் 
சுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாக குற்றச்செயல்கள் கூடிவருவதாக குற்றஞ்சாட்டிய சுவிஸ் மக்கள் கட்சி, குற்றச்செயல்களில் ஈடுபட்டும் வெளிநாட்டவர்களை நாடுகடுத்துவது தொடர்பான பொது வாக்கெடுப்பவை முன்வைத்தது.
பத்து ஆண்டுகளில் இரண்டு சிறிய குற்றங்களைப் புரிந்த எந்தவொரு வெளிநாட்டவரும், மேல்முறையீடு செய்யும் உரிமை எதுவும் இல்லாமல், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என்ற பிரேரணையை இன்று மக்கள் நிராகரித்து வாக்களித்துள்ளனர்.

இதில் 58.84 (1,966,976) சதவிகித குடிமக்கள் ‘குற்றம் செய்த அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டாம்’ என்றும், 41.14(1,375,038) சதவிகித  மக்கள் இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது வரை, வெளிநாட்டவர்களுக்கு ஆதரவாகவே முடிவுகள் வெளிவந்துள்ளதால், சுவிஸ் மக்கள் கட்சி இந்த வாக்கெடுப்பில் தோல்வியை தழுவியுள்ளது.
பெர்ன மாநில தேர்தலில் அம்மான் வெற்றி-182476 அடுத்தபடியாக வந்தவர் எஸ் வி பி கட்சி குக்கிச்பெகேர்  /176219


ad

ad