புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 பிப்., 2016

ஈழத்தமிழன் நமசிவாயம் லவுசான் மாநகரத்தேர்தலில் மீண்டும் வெற்றி-


பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெற்ற லொசான் மாநகரசபைத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான
தம்பிப்பிள்ளை நமசிவாயம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். 9833 வாக்குகளைப் பெற்று தனது அணி சார்பில் போட்டியிட்ட 100 பேரில் இவர் நான்காவது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அது கடந்த முறை இவர் பெற்ற வாக்குகளை விட 4020 அதிகமாகும். இவரது அணியில் முதலாவது இடத்திற்குத் தெரிவானவர் 10001 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் இன்னமும் 169 வாக்குகளை இவர் மேலதிகமாகப் பெற்றிருந்தால் இவர் கட்சிப் பட்டியலில் முதலாவது இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்திருப்பார்.
இந்தத் தேர்தலில் இவரின் வெற்றிக்கு தமிழ் மக்களின் வாக்குகளே உறுதுணையாக இருந்துள்ளன. சுமார் 80 வீதமான தமிழ் மக்களே இம்முறை வாக்களித்துள்ள நிலையில் எஞ்சிய 20 வீதமானோரும் வாக்களித்திருத்தால் இந்தச் சாதனை நிகழ்த்தப் பட்டிருக்கும்.
2007 ஆம் ஆண்டு முதல் மாநகரசபை உறுப்பினராக இருந்துவரும் நமசிவாயம் கடந்தமுறை நடைபெற்ற தேர்தலில் 5813 வாக்குகளைப் பெற்று பட்டியலில் 18 ஆவது இடத்தைப் பெற்றிருந்தார்.
இதேவேளை இந்தத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் ஒட்டுமொத்த வாக்குவங்கியுமே அதிகரித்து இருப்பது குறிப்பிடத் தக்கது. கடந்த முறை லொசான் மாநகர சபையில் 29 உறுப்பினர்களைப் பெற்றிருந்த இக்கட்சி இம்முறை 4 உறுப்பினர்களை அதிகமாகப் பெற்று 33 இடங்களைச் சுவீகரித்து உள்ளது.
அதேவேளைஇ வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியின் வாங்கு வங்கி சரிவு கண்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு எதிரான வாக்கெடுப்புக்கு இந்தக் கட்சி அழைப்பு விடுத்திருந்த நாள் முதலாக இக்கட்சியின் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றமை தெரிந்ததே.

ad

ad