புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014



சென்னை அடையாரில் அமைந்துள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் அண்மையில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் வெளியிட்ட கருத்தைக் கூட்டமைப்பின் அரசியலில் ஒரு திருப்பு முனையாக கருதலாம். இந்தியாவின் மாநிலங்களுக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அத்தகைய அதிகாரத்தைத் தான் இலங்கையில் நாங்களும் எதிர்பார்க்கின்றோம் என்று அச்சொற்பொழிவில் அவர் கூறினார்.

 இனப் பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய தீர்வை நாடி நிற்கின்றது என்பது இதுவரை தெளிவு இல்லாமலேயே இருக்கின்றது. தனது தீர்வு எது என்பதைக் கூட்டமைப்பு தீர்வுத் திட்டமொன்றின் மூலமோ கோரிக்கை மூலமோ வெளிப்படுத்தவில்லை. சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று கூறி வருகின்ற போதிலும் அது எத்தகைய தீர்வு என்று சொல்லவில்லை.
எமது நாடுகளை இலங்கை அரசு குறைப்படுகின்றது; ஜேர்மன் தூதுவர் கவலை வெளியீடு 
இலங்கை ஜேர்மன் நட்புறவு 60 வருடங்களைக் கொண்டது. அதன்படி இன்னும் உதவித்திட்டங்களுடன் வடக்கு கிழக்கில் எமது நட்புறவு தொடரும் என ஜேர்மன் தூதுவர் இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
சர்வதேச உதவிகளைக் கட்டுப்படுத்துகிறது அரசு; வடக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு 
சர்வதேச நாடுகளில் இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற உதவிகளை அரசாங்கம் கட்டுப்படுத்தி வருகின்றது என வடக்கு முதலமைச்சர் சீ.வீ .விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆஸியுடனான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்:

தென் ஆபிரிக்க அணி அபார வெற்றி


தென் ஆபிரிக்கா-அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் கடந்த 20-ம் திகதி தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்சில் தென்ஆபிரிக்கா 423 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 246 ஓட்டங்களும் எடுத்தன. 177 ஓட்டங்கள்; முன்னிலையுடன்


சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம்
 

மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை கண்டிப்போம். ஏழு தமிழர்களை சிறையில் இருந்து விடுவிப் போம் என்ற முழக்கத்துடன்  நாளை 25/02/2014, காலை 11 மணிக்கு சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை

7 பேர் விடுதலையில் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதை ஆராய்ந்து செய்வோம் : ஜெயலலிதா பேட்டி
முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தனது பிறந்த தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேச்சுவார்த்தை முடிந்ததும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்படும்: ஜெயலலிதா
ஜெயலலிதா தனது பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் வரும் பாராளுமன்றத் தேர்த-ல் அதிமுக சார்பில்

ராகுல் காந்தியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு: கட்சியை இணைப்பது தொடர்பாக ஆலோசனை
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியை, திங்கள்கிழமை காலை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார்.


மோடி பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: உ.பி.யில் 2 பேர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த அக்டோபர் மாதம் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசிய பொதுக்கூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்தன. ரயில் நிலையத்திலும் சினிமா தியேட்டர் முன்பும் இரு குண்டுகள் வெடித்தன.
ஜெயலலிதாவுக்கு நரேந்திரமோடி வாழ்த்து
 முதல்வரின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.

7 பேரை விடுதலை செய்வது இறையாண்மைக்கு எதிரானது: சுதர்சன நாச்சியப்பன்

மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.   அப்போது அவர்,   ‘’காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி பிரதமர் ஆக இருந்தபோது மட்டுமல்ல, தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள சோனியா காந்தியும் தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும்

சுவிசில் நடைபெற்ற புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவு 



இன்று (23.02.2014)காலை 10 மணிக்கு சுவிட்சர்லாந்து பேர்ண் மாநகரில் நடைபெற்ற புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் ஆலோசனை சபையும் தெரிவு செய்யப்பட்டது.

24 பிப்., 2014


தவறான பாலியல் செயற்பாட்டினால் மலேசியாவில் உயிரிழந்த இலங்கையர் 
தவறான பாலியல் செயற்பாட்டினால் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலத்தை மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலுள்ள தொடர்பாமாடி வீடொன்றிலிருந்து அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. அண்மையில்

லண்டனில் இருந்து ஊருக்கு பணம் அனுப்புவது ஜாக்கிரதை: உண்மை சம்பவம் 
பிரித்தானியாவில் உள்ள பல ஈழத் தமிழர்கள், ஊரில் உள்ள தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புவது வழக்கம். இதற்கு பலர் பாவிப்பது தமிழர்களால் நடத்தப்படும் ஸ்தாபனங்களை தான். ஆங்காங்கே முளைவிட்டுள்ள இந்த தமிழர் ஸ்தாபனத்தினால் சிலவேளைகளில்

‘கொலைக்களம்’ ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை!

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவம் உள்ளிட்ட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற ஆதாரங்களை உள்ளடக்கி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘கொலைக்களம்’ ஆவணப்படங்களை இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 79 எலும்புக் கூடுகள் மீட்பு: அகழ்வுப் பணிகள் தொடர்கிறது

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 79 எலும்புக் கூடுகள் மீட்கப் பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கான பொறி முறையை ஐ.நா முன் வைப்பதே சிறப்பானது: கூட்டமைப்பு

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப் படுமானால், அதற்கான பொறிமுறையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை முன்வைக்க வேண்டும். அதுவே, சிறப்பானதான அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு; முதலிடத்தில் ரஷ்யா
ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகிய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன.
இலங்கையின் எப்பகுதியில் இருந்தும் இராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கலாமாம்; கூறுகிறார் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி 
இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு யாரும் வற்புறுத்தினால் என்னிடமோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ முறையிட்டால் குறித்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதச ரணசிங்க தெரிவித்துள்ளார்.

டுபாய் ஓபன் அரையிறுதியில் செரீனா தோல்வி


டுபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செரீனாவைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் பிரான்ஸின் ஏலிஸ் கார்னெட்.

  • இறுதிச் சுற்றில் கார்னெட்டும் செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ¤ம் மோதவுள்ளனர். இறுதிச் சுற்றில் சகோதரிகள் இருவரும் மோதுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

ad

ad