புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014

சர்வதேச உதவிகளைக் கட்டுப்படுத்துகிறது அரசு; வடக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு 
சர்வதேச நாடுகளில் இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற உதவிகளை அரசாங்கம் கட்டுப்படுத்தி வருகின்றது என வடக்கு முதலமைச்சர் சீ.வீ .விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜேர்மனிய தூதுவர் யூர்ஜென் மொகாட் இன்று மாலை வடக்கு முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

சந்திப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலில் எந்தளவுக்கு எமது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகின்றது என்று என்னிடம் கேட்டிருந்தார். அதன்படி எமக்கு உள்ள பிரச்சினைளையும் அவற்றைக் கொண்டு நடத்துவதில் இருக்கும் சிரமங்கள் குறித்தும் தெளிவுபடுத்தினேன்.

மேலும் இரண்டு வருடங்களுக்கு மேலாக இலங்கையில் இவர் தங்கி உள்ளமையால் இங்குள்ள நிலைமைகள் குறித்து நன்கு அறிந்துள்ளார்.

60 வருடமாக ஜேர்மன் நாட்டு மக்களுடன் எமக்கு நட்புறவு  இருந்து வருகின்றது. அந்த தொடர்புகளின் நிமிர்த்தம் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திகள் குறித்து பார்த்துச் செல்லவே வந்திருந்தார்.

இருப்பினும் யுத்த்தினால் பாதிப்புற்றவர்களின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு வடக்கு கிழக்கு மாகாணத்திலேயே அவர்களது உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

எனினும் பல நாடுகளில் இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற உதவிகளை ஒரளவிற்கு எமது அரசாங்கம் கட்டுப்படுத்தி வருகின்றது.

ஊவா மாகாணத்திலும் பிரச்சினைகள் உள்ளதாகவும் தமக்கும் உதவிகளை வழங்க வேண்டும் என்று அரசு கேட்டுள்ளது.  இருப்பினும் போரின்  பின்னால் கஸ்ரமான நிலையில்  வடக்கு கிழக்கு மக்கள் இருப்பதால் அவர்களுக்கே தற்போது உதவிகளைச் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளனர்.

இருப்பினும் பலவிதத்திலும் தங்கள் நாடுகள் தொடர்பில்இலங்கை அரசு குறை கூறிவருவதனால் இந்த உதவித் திட்டங்கள் எந்த அளவிற்கு நடைபெறும் என்று தெரியாத நிலையிலேயே ஜேர்மன் அரசும் உள்ளது,

ஆனால் அவர்கள் எமக்கு செய்யும் உதவிகளை மறக்க கூடாது. பல வழிகளிலும் நன்மையினை செய்கின்றனர். அத்துடன் தொழில் சார் பயிற்சி நிறுவனங்களை அமைத்து அதனூடாக உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இத் திட்டங்கள் தற்போது யாழ். மாவட்டம் மட்டும் அன்றி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

மேலும் எதிர்வரும் சனிக்கிழமை ஜேர்மனில் உள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . அதன் திறப்பு விழாவிற்கு நான் போக உள்ளேன். என்னுடன் குறித்த தூதுவரும் வரவுள்ளார்.

தமிழ் மக்களுடன் இணைந்தே அவர்கள் தங்களது வேலைத்திட்டங்களை செய்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

- See more at: 

ad

ad