டுபாய் ஓபன் அரையிறுதியில் செரீனா தோல்வி
- இறுதிச் சுற்றில் கார்னெட்டும் செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ¤ம் மோதவுள்ளனர். இறுதிச் சுற்றில் சகோதரிகள் இருவரும் மோதுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
‘செரீனாவுடன் மோதுவதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்’ என வீனஸ் வில்லியம்ஸ் தெரிவித்திருந்தார். ஆனால் கார்னெட் வெற்றி பெற்றதால், சகோதரிகள் மோதுவது தடைப்பட்டது. மற்றொரு அரையிறுதியில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை வீனஸ் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டுபாயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் செரீனாவும், கார்னெட்டும் மோதினர். இதில் 8-4. 6-4 என்ற நேர் செட்டில் கார்னெட் வெற்றி பெற்றார். ஆவுஸ்திரேலிய ஓபனில் காயம் அடைந்த பின் செரீனா பங்கேற்கும் முதல் போட்டி இது என்பதால் அவர் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.