புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014

எமது நாடுகளை இலங்கை அரசு குறைப்படுகின்றது; ஜேர்மன் தூதுவர் கவலை வெளியீடு 
இலங்கை ஜேர்மன் நட்புறவு 60 வருடங்களைக் கொண்டது. அதன்படி இன்னும் உதவித்திட்டங்களுடன் வடக்கு கிழக்கில் எமது நட்புறவு தொடரும் என ஜேர்மன் தூதுவர் இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜேர்மனிய தூதுவர் யூர்ஜென் மொகாட் இன்று மாலை வடக்கு முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்,

யுத்த முடிவின் பின்னர் வடக்கு கிழக்கில் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு பல உதவித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

அதற்காக தொழில் சார் பயிற்சிப்பட்டறைகளை அமைத்து செயற்படுத்தி வருகின்றோம். பெண் தலைமைக்குடும்பங்களுக்கான வருவாயை அதிகரிக்க பாற்பண்ணை போன்ற திட்டங்களை ஆரம்பித்து வைக்கின்றோம்.

எனினும் இங்கு மேற்கொள்ளப்படுகின்ற உதவித்திட்டங்களை தெற்கிலும் வழங்குமாறு அரசு எங்களிடம் கேட்டிருந்தது. எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே தற்போது வழங்க முடியும் என்று எடுத்துக் கூறியுள்ளோம்.

இருப்பினும் எமது நாடுகளை இலங்கை அரசு குறைகூறிக் கொண்டே இருக்கின்றது இந்த வகையில் எவ்வளவு காலம் இந்த செயற்திட்டங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரியவில்லை.

எனினும் இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையில் 60 ஆண்டுகள் நட்பு ரீதியான உறவு உள்ளது எனவே எம்மால் ஆன உதவிகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றோம் என்றார்.

மேலும் ஜேர்மன் தூதுவர் யாழ்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டதுடன் ஜேர்மன் நாட்டு அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் பார்வையிட்டுள்ளார். தொடர்ந்தும் பல முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?

ad

ad