புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014



மோடி பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: உ.பி.யில் 2 பேர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த அக்டோபர் மாதம் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசிய பொதுக்கூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்தன. ரயில் நிலையத்திலும் சினிமா தியேட்டர் முன்பும் இரு குண்டுகள் வெடித்தன.
இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 8 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர்.

மேலும் சில குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
உளவுத்துறை உதவியுடன் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பு, இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான யாசின் பட்கலை கைது செய்துள்ளது.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய பக்ருதின் மற்றும் அகமது ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு உத்திரபிரதேசத்தில் உள்ள மிர்சாபூர் நகரில் அவர்கள் இருவரும், பாட்னா குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்திய பொருள்களை கொள்முதல் செய்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad