புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014


பேச்சுவார்த்தை முடிந்ததும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்படும்: ஜெயலலிதா
ஜெயலலிதா தனது பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் வரும் பாராளுமன்றத் தேர்த-ல் அதிமுக சார்பில்
போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டடார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பின்னர் இவ்விரு கூட்டணி கட்சிகளுக்கும், ஒதுக்கப்படும் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் கழக வேட்பாளர்கள் திரும்பப்பெற்றுக்கொள்வார்கள். 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 3.3.2014 முதல் 5.4.2014 வரை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்கிறேன். கழக வேட்பாளர்ளை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன் என்றார்.

ad

ad