புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014


தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அதிமுக உறுதிபூண்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் அடங்கியுள்ள அம்சங்கள் பின்வருமாறு,
01.இலங்கைத் தமிழர் பிரச்சினை:-
இலங்கை உள்நாட்டுப் போரின் போது, சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனப் படுகொலை

இந்தியத் தடையை மீறி இணையத்தில் போர் தவிர்ப்பு வலயம் காணொளி! ஹிந்தி மொழியாக்கமும் வெளியானது
திரையரங்குகளில் திரையிட இந்தியத் தணிக்கைச் சபை அனுமதி மறுத்ததை அடுத்து, 'போர் தவிர்ப்பு வலயம் :சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம், நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டது.

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கை வெளிவந்தது!- அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரை
இலங்கை  தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கு பரிந்துரைத்தவாறு, ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவிபிள்ளை அவர்களுடைய அறிக்கை சற்று முன்னர் வெளிவந்துள்ளது.

லாலு பிரசாத் கட்சியில் 13 எம்.எல்.ஏ.க்கள் விலகல்
லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி இரண்டாக உடைந்தது. அந்த கட்சியின் 22 எம்.எல்.ஏ.க்களில் 13 பேர், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவு தெரிவித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.


விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது மிகப்பெரிய தவறு என்று இலங்கையில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு காலப் பகுதியில், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன், கடந்த சனிக்கிழமை, சுவீடனில் வைத்து, தமிழ்நெற் இணையத்தளத்துக்கு வழங்கியுள்ள

மூன்று மாத காலத்தில் இலங்கை ரூபாய் பெறுமதி இன்று குறைந்தது!- மேலும் வீழ்ச்சி அடையும் நிலை
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று மாதங்களின் குறைந்த பெறுமதியை இன்று பதிவு செய்துள்ளது.
இலங்கை - பாகிஸ்தான் இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் விறுவிறுப்புடன் ஆசியக் கோப்பை தொடங்கவுள்ளது
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கையும் நடப்பு சாம்பியனான

ராஜீவ் கொலையாளிகள் நால்வர் விடுதலை விவகாரம்: மத்திய அரசின் மனு மீது பிப்ரவரி 27-இல் விசாரணை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் தமிழக அரசு தன்னிச்சையாக விடுதலை செய்ய அனுமதிக்கக் கூடாது


சென்னை அடையாரில் அமைந்துள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் அண்மையில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் வெளியிட்ட கருத்தைக் கூட்டமைப்பின் அரசியலில் ஒரு திருப்பு முனையாக கருதலாம். இந்தியாவின் மாநிலங்களுக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அத்தகைய அதிகாரத்தைத் தான் இலங்கையில் நாங்களும் எதிர்பார்க்கின்றோம் என்று அச்சொற்பொழிவில் அவர் கூறினார்.

 இனப் பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய தீர்வை நாடி நிற்கின்றது என்பது இதுவரை தெளிவு இல்லாமலேயே இருக்கின்றது. தனது தீர்வு எது என்பதைக் கூட்டமைப்பு தீர்வுத் திட்டமொன்றின் மூலமோ கோரிக்கை மூலமோ வெளிப்படுத்தவில்லை. சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று கூறி வருகின்ற போதிலும் அது எத்தகைய தீர்வு என்று சொல்லவில்லை.
எமது நாடுகளை இலங்கை அரசு குறைப்படுகின்றது; ஜேர்மன் தூதுவர் கவலை வெளியீடு 
இலங்கை ஜேர்மன் நட்புறவு 60 வருடங்களைக் கொண்டது. அதன்படி இன்னும் உதவித்திட்டங்களுடன் வடக்கு கிழக்கில் எமது நட்புறவு தொடரும் என ஜேர்மன் தூதுவர் இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
சர்வதேச உதவிகளைக் கட்டுப்படுத்துகிறது அரசு; வடக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு 
சர்வதேச நாடுகளில் இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற உதவிகளை அரசாங்கம் கட்டுப்படுத்தி வருகின்றது என வடக்கு முதலமைச்சர் சீ.வீ .விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆஸியுடனான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்:

தென் ஆபிரிக்க அணி அபார வெற்றி


தென் ஆபிரிக்கா-அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் கடந்த 20-ம் திகதி தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்சில் தென்ஆபிரிக்கா 423 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 246 ஓட்டங்களும் எடுத்தன. 177 ஓட்டங்கள்; முன்னிலையுடன்


சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம்
 

மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை கண்டிப்போம். ஏழு தமிழர்களை சிறையில் இருந்து விடுவிப் போம் என்ற முழக்கத்துடன்  நாளை 25/02/2014, காலை 11 மணிக்கு சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை

7 பேர் விடுதலையில் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதை ஆராய்ந்து செய்வோம் : ஜெயலலிதா பேட்டி
முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தனது பிறந்த தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேச்சுவார்த்தை முடிந்ததும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்படும்: ஜெயலலிதா
ஜெயலலிதா தனது பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் வரும் பாராளுமன்றத் தேர்த-ல் அதிமுக சார்பில்

ராகுல் காந்தியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு: கட்சியை இணைப்பது தொடர்பாக ஆலோசனை
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியை, திங்கள்கிழமை காலை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார்.


மோடி பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: உ.பி.யில் 2 பேர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த அக்டோபர் மாதம் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசிய பொதுக்கூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்தன. ரயில் நிலையத்திலும் சினிமா தியேட்டர் முன்பும் இரு குண்டுகள் வெடித்தன.
ஜெயலலிதாவுக்கு நரேந்திரமோடி வாழ்த்து
 முதல்வரின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.

7 பேரை விடுதலை செய்வது இறையாண்மைக்கு எதிரானது: சுதர்சன நாச்சியப்பன்

மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.   அப்போது அவர்,   ‘’காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி பிரதமர் ஆக இருந்தபோது மட்டுமல்ல, தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள சோனியா காந்தியும் தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும்

சுவிசில் நடைபெற்ற புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவு 



இன்று (23.02.2014)காலை 10 மணிக்கு சுவிட்சர்லாந்து பேர்ண் மாநகரில் நடைபெற்ற புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் ஆலோசனை சபையும் தெரிவு செய்யப்பட்டது.

ad

ad