புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014

இலங்கை - பாகிஸ்தான் இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் விறுவிறுப்புடன் ஆசியக் கோப்பை தொடங்கவுள்ளது
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கையும் நடப்பு சாம்பியனான
பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன.
ஆட்டங்கள் அனைத்தும் வங்கதேச தலைநகர் டாக்காவை அடுத்துள்ள ஃபதுல்லா மற்றும் மிர்பூர் நகரங்களில் நடைபெறவுள்ளன. முதல் 5 லீக் ஆட்டங்கள் ஃபதுல்லாவிலும், அடுத்த ஆட்டங்கள் மிர்பூரிலும் நடைபெறும்.
இலங்கை அணி கடந்த மாதமே வங்தேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் பங்கேற்று அனைத்துத் தொடரிலும் வெற்றி பெற்று அசத்தல் ஃபார்மில் உள்ளது. சங்ககரா டெஸ்டில் முச்சதம் அடித்ததோடு ஒருநாள் ஆட்டத்திலும் சதம் அடித்து கவனம் ஈர்க்கிறார். மூத்த வீரர் ஜெயவர்த்தனேவும் எதிரணிக்கு கடும் சவால் அளிப்பார். தில்ஷன் காயம் காரணமாக விலகியது இலங்கைக்குப் பின்னடைவே.
தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள இலங்கை, இந்த தொடரின் அனைத்து ஆட்டத்திலும் வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய அணியை தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ள வாய்ப்பு உள்ளது.
நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கத் தொடர்களில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. மிஸ்பா-உல்-ஹக், முகமது ஹஃபீஸ் மற்றும் அகமது ஷேஸôத் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் வரிசையில் நம்பிக்கை அளிக்கின்றனர். முகமது இர்ஃபான் இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு சறுக்கல்தான் என்றாலும் உமர் குல் தலைமையிலான பந்து வீச்சும் வலுவாகவே உள்ளது. குறிப்பாக, ஷார்ஜாவில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்த முகமது தல்ஹா முதன்முறையாக ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்பதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை - பாகிஸ்தான் இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் விறுவிறுப்புடன் ஆசியக் கோப்பை தொடங்கவுள்ளது.
இருப்பினும், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டமே இத்தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்நோக்கும் முக்கியமான ஆட்டம். தோனி இல்லாமல் களமிறங்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மிஸ்பா தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதும் ஆட்டம் புதன்கிழமை நடைபெறும்.

ad

ad