புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2014


லாலு பிரசாத் கட்சியில் 13 எம்.எல்.ஏ.க்கள் விலகல்
லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி இரண்டாக உடைந்தது. அந்த கட்சியின் 22 எம்.எல்.ஏ.க்களில் 13 பேர், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவு தெரிவித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.


லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளம், வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணியில் இடம் பெற்று இருந்த ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி பா.ஜனதா கூட்டணியில் சேர முடிவு எடுத்துள்ளது. இது லாலு கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், லாலு பிரசாத் கட்சியில் உள்ள 22 எம்.எல்.ஏ.க்களில் 13 பேர், அந்த கட்சியில் இருந்து விலகி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி இரண்டாக உடைந்துவிட்டது.
லாலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள 13 எம்.எல்.ஏ.க்களும் நேற்று சம்ரத் சவுத்ரி எம்.எல்.ஏ. வீட்டில் கூடி இந்த முடிவை எடுத்தனர். பின்னர் தங்கள் முடிவு குறித்து சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரிக்கு அவர்கள் கடிதம் அனுப்பி வைத்தனர். அந்த கட்சியை சேர்ந்த ஜாவீத் இக்பால் அன்சாரி இந்த தகவலை உறுதி செய்தார்.

ad

ad