மூன்று மாத காலத்தில் இலங்கை ரூபாய் பெறுமதி இன்று குறைந்தது!- மேலும் வீழ்ச்சி அடையும் நிலை
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று மாதங்களின் குறைந்த பெறுமதியை இன்று பதிவு செய்துள்ளது.
இன்றைய தினம் டொலர் ஒன்றுக்கான இலங்கை பெறுமதி 131 ரூபா என்ற அதிகரித்த நிலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி மீதான அதிகரித்த கேள்வியே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் பண்டிகை காலம் என்பதால்ää மேலும் இறக்குமதிகள் அதிகரிக்கவுள்ள நிலையில், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.