புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012

வவுனியாவில் தீபம் ஏற்றியவர்களை புகைப்படம் எடுத்து வருகிறது இராணும்; மக்கள் அச்சத்தில்
வவுனியாவில் தீபமேற்றியவர்களை இராணுவமும் புலனாய்வும் துருவித் துருவி பல மணி நேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவர்களையும் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இன்று மாவீரர்  நாள். எமக்காக தமது உயிரை தியாகம் செய்த வீர மறவர்களின் நினைவாக இன்று வவுனியா பண்டார வன்னியன் சிலைக்கு  உறுப்பினர் ரதன் தலைமையில் தீபம் ஏற்றப்பட்டது.

எனினும் பலர் இன்றைய தினம் வீடுகள் , கடைகள், பாடசாலைகள் என்பனவற்றிலும் தீபம் ஏற்றினர். இன்று குமாராலய தீபம். இதனை முருகன் கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடுவது என்பது தமிழர்களின் பாரம்பரியமான நிகழ்வுகளில் ஒன்று.

இன்றைய தினம் வவுனியா சைவப்பிரகாச வித்தியாலயத்தில் பாடசாலையை சுற்றி தீபம் ஏற்றப்பட்டிருந்தது. அத்துடன் குருமன்காட்டில் கடை ஒன்றிலும் மேலும் சில வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டதாக தெரியவருகின்றது.

எனினும் இதை அறிந்த இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் குறித்த இடங்களுக்குச் சென்று பல மணிக்கணக்காக விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவர்களை புகைபடங்கள் மற்றும் வீடியோ எடுத்தும் சென்றுள்ளனர்.

குறிப்பாக சைவப்பிரகாச வித்தியாலய அதிபரை பல மணி நேரம் விசாரித்துள்ளனர். எதற்காக பாடசாலையில் தீபம் ஏற்றினீர்கள் என்று பல கோணங்களில் விசாரணை செய்ததாகவும் இன்று குமாராலய தீபம் என்பதால் தாம் தீபம் ஏற்றியதாகவும் அவர் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

விசாரணையினை அடுத்து பாடசாலையின் வாயிலில் குமாராலய தீபம் என்றும் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கடைக்காரரிடம் விசாரணை மேற்கொண்ட போது பத்திரிகைகளில் இன்றைக்கும் தீபம் ஏற்ற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது அதனால் தான் ஏற்றினோம் என்றனர். அப்போ
து புலனாய்வாளர்களினால் எந்தப் பத்திரிகை என வினாவப்பட்டதையடுத்து உதயன் என்று கூறி செய்தியை கடை உரிமையாளர் காட்டியுள்ளார். அதனை பார்த்த அவர்கள் பத்திரிகையையும் தம் வசம் எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் தீபம் ஏற்றப்பட்ட வீடுகளுக்குச் சென்று அவர்களை மிரட்டியதுடன் அவர்களையும் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளனர்.

இருப்பினும் சந்தேகத்திற்கு இடமான முறையில் பலர் வாகனங்களில் வீதியில் சுற்றித்திரிவதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ad

ad