புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012


லண்டன் மாநகரம் அதிர்ந்தது ! மாவீரர் தினத்தில் பல்லாயிரம் மக்கள் !


லண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர் . காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வினை
, ஒருங்கிணைப்புக் குழுவினைச் சார்ந்த சகோதரி கௌசிகா அவர்கள் பிரித்தானிய தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைத்தார் .
தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.தனம் அவர்கள் ஏற்றிவைக்க , அதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த மாவீரர் செல்வங்களின் கல்லறைகள மீது தமிழ் தேசிய இனத்தின் தேசியக் கொடி போர்த்தப்பட்டது.
அதனை அடுத்து , மணி ஓசை மண்டமெங்கும் வியாபிக்க , முதன்மைச் சுடர் ஏற்றப்பட்டது.
இம் முதன்மைச் சுடரினை ,யாழ்.கோட்டை முற்றுகைச் சமரில் வீரமரணமெய்திய மாவீரர் கப்டன்.ஹீரோ ராஜ் அவர்களின் பெற்றோர் சண்முகசுந்தரம்,கமலாதேவி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

இங்கு காணொளி உடாக நெடுமாறன் ஐயா ,திரு.வைகோ ஆகியோர் மாவீரர் தின எழுச்சி உரை நிகழ்த்தினர்.









ad

ad