புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012


யாழ். மாணவர்களால் சிங்கள பாதுகாப்பு படை விடுதிகளிலிருந்து விரட்டியடிப்பு! உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்
யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை முற்றுகையிட்டிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் மாணவர்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர் என்பதோடு உணர்வு பூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் கொண்டாடப்பட்டுள்ளது.
மாவீரர் தின நிகழ்வுகளைக் கொண்டாடக்கூடாது என்பதற்காக இன்று மாலை 6 மணியளவில் யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளுக்குள்ளாக இராணுவத்தினரும் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் உள் நுழைந்தனர்.
உள்ளே நுழைந்தவர்கள் மாணவர்களை விடுதிகளுக்குள்ளே வரவும் வெளியே போகவும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் மாணவிகள் மாவீரர் தின நிகழ்வுகளுக்காக வைத்திருந்த பொருட்களை படையினர் அடித்து நாசம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆயுதங்களுடனும் பொல்லுகளுடனும் வந்திருந்த இராணுவத்தினர் மீதும் பொலிஸார் மீது மாணவர்களும் மாணவிகளும் ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
பாதை அமைப்பிற்காகவும் கட்டிட புனரமைப்பிற்காகவும் கொண்டு வரபட்டிருந்த கற்களை கைகளில் எடுத்துக்கொண்ட மாணவர்கள், படையினர் மீது கடுமையாக தாக்கினார். இதன்போது ஊடகவியலாளர்களையும் அவர்கள் பார்க்கவில்லை.
மாணவர்களின் தாக்குதலை தாக்குபிடிக்காத படைத்தரப்பினர் வெளியே தப்பியோடினார்கள். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆண்கள் விடுதியின் மேற்தளத்திலும் ஏனைய இடங்களிலும் மாணவர்கள் தீபமேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
பாதுகாப்பு படையின் இரும்புக் கரங்களை தகர்த்தெறிந்து உணர்வோடு தமக்காக இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி மாணவர்கள் மேற்கொண்ட உணர்வு மிக்க போராட்டத்தினைக் கண்டு சிங்கள படைகள் அஞ்சி நடுங்கின.
இதேவேளை இராணுவம் தங்களை சுற்றி வளைத்து விட்டதாக யாழ்.ப ல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்திற்கு தகவல் தெரிவிக்க மாணவர்கள் முயன்றபோது, அவர் தனது கையடக்க தொலைபேசியை நிறுத்துவிட்டார் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு மாணவர்களுக்காக செயற்பட வேண்டிய ஏனைய சில விரிவுரையாளர்களும் தொலைபேசிகளை நிறுத்தி விட்டு மாணவர்களை நடுத்தெருவில் விட்டனர் என்று மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.

ad

ad