புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012


அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தேசத்தின் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்திய யாழ்.மக்கள்
பாரிய இராணுவ அடக்குமுறைகளுக்கும் கெடுபிடிகளுக்கும் இடையில் தமீழிழ மாவீரர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாப்பட்டுள்ளன.
சரியாக இன்று மாலை 6.07 மணிக்கு யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் பொது மக்கள் தமது வீடுகளில் தீபமேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். ஒரு சில இடங்களில் வீதிகளிலும் சுட்டிகளை வைத்து மாவீரர்களை நினைத்து மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
ஒரு சில வீடுகளில் சிறுவர் சிறுமியர்கள் மாவீரர்களது நினைவுகளைச் சுமந்தவர்களாய் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேவேளை மாவீரர் தினச் சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்த போது இராணுவத்தினர் அவற்றை தேடித் தேடி கிளித்து எறிந்தனர்.
குறிப்பாக, முருகன் ஆலயங்களில் இன்று கார்த்திகைத் தீபமேற்றுவதற்கும் படையினர் தடை விதித்ததோடு, ஒரு சில இடங்களில் பூசாரிகளையும் தாக்கியுள்ளனர். மேலும் மணியடிப்பதற்கும் மாலை 6 மணியிலிருந்து 8 மணியவரை படையினர் தடை விதித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீதிச் சோதனைகள் அதிகரித்துக் காணப்பட்டதோடு இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படையின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கும் சவால்களும் மத்தியிலும் மாவீரர்களுக்காக யாழ். மக்கள் தமது வீரவணக்கங்களை செலுத்தினார்கள்.

ad

ad