புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012


தமிழீழத் தாயகத்தினை கண்முன் நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள்!
தமிழீழத் தாயகத்தினை கண்முன்னிறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லறைகளுக்கு மத்தியில் பிரான்சில் மாவீர் நாள் வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழர் தாயகத்தில் எவ்வாறு மாவீரர் நாள் முன்னெடுக்கப்படுகின்றதோ அந்த மரப்புக்கமைய உணர்வுபூர்வமாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மாவீரர்களது பெற்றோர்கள் மற்றும் குடுமபத்தினர் கௌரவதாக அழைத்துவரப்பட்டு அவர்களது பிள்ளைகளின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லறையின் முன் மாவீரர்களுக்கு சுடரேற்றப்பட்டிருந்தது.
தமிழீழத் தேசியக் கொடியினை திருமதி உமா அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடர் தமிழர் கலைபண்பாட்டுக் கழக பொறுப்பாளர் பரா அவர்களும் பிரதான பொதுச்சுடரினை தமிழரசன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.

ad

ad