புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012



தே.மு.தி.க எம்.எல் ஏ கைது!
மறியல் செய்த 36 தொண்டர்களும் கைது! 


 சேலம் மாவட்டம், ஆத்தூர் பக்கமுள்ள தலைவாசல் பஸ் ஸ்டாண்டில், கடந்த ஞாயிற்று கிழமையன்று இரவு அ.தி.மு.க., அரசைக் கண்டித்து, தே.மு.தி.க., சார்பில், கண்டன பொதுக்கூட்டம்  நடந்தது.
கூட்டத்தில், தே.மு.தி.க., மாநில துணைச் செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள் சேலம் வடக்கு மோகன்ராஜ், மேட்டூர் பார்த்திபன், கெங்கவல்லி சுபா, மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது, அ.தி.மு.க., ஒன்றிய மாணவர் அணி செயலாளர் வக்கீல் வேல்முருகன், ஜெ., பேரவை செயலாளர் சரவணன், ஒன்றிய நிர்வாகிகள் கண்ணன், ஜெயராமன், முத்தையன் உள்பட, 50க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு பணியில் இருந்த, ஆத்தூர் டி.எஸ்.பி., (பொறுப்பு) மனோகரனிடம், "தே.மு.தி.க., கூட்டத்தை நிறுத்த வேண்டும்; தமிழக முதல்வரை அவதூறாக பேசிய எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கூறி, கடும் வாக்குவாதம் செய்தனர்.
இரவு, 10 மணிக்கு கூட்டம் முடிந்து, எம்.எல்.ஏ.,க்கள் மோகன்ராஜ், பார்த்திபன், சுபா, மாநில நிர்வாகி இளங்கோவன் ஆகியோர், காரில் ஏறி புறப்பட்டனர். 
அப்போது, டி.எஸ்.பி., மனோகரன், இரவு, 10.05 மணிக்கு கூட்டம் முடித்ததால், மாநில துணைச் செயலாளர் இளங்கோவன், முதல்வரை அவதூறாக பேசியதாக, ஒன்றிய பொருளாளர் துரை.கருப்பழகி ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளதால், அவர்களை கைது செய்வதாக கூறினர்.
அதற்கு, எம்.எல்.ஏ.,க்கள் பார்த்திபன், மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், "யாரையும் கைது செய்ய விடமாட்டோம்' என, போலீஸாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து, டி.எஸ்.பி., மனோகரன் உள்ளிட்ட போலீஸார், எம்.எல்.ஏ., பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகளின் கார்களை செல்ல விடாமல் தடுத்து நின்றனர்.
இதனால், ஆத்திரமடைந்த தே.மு.தி.க.,வினர், இரவு, 10.30 மணியளவில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, இரவு, 11 மணியளவில், எம்.எல்.ஏ., உள்ளிட்ட நிர்வாகிகளை, போலீஸார் விடுவித்தனர்.
இதையடுத்து தே.முதிக சிறப்பு பேச்சாளர் கருப்பழகி, தேமுதிக மாநில துணை செயலாளர் இளங்கோவன், தலைவாசல் சட்டமன்ற உறுப்பினர் சுபா, தலைவாசல் ஒன்றிய தேமுதிக செயலாளர் அருள்வேல், தலைவாசல் நகர செயலாளர் சக்கரவர்த்தி, தலைவாசல் ஒன்றிய துணை செயலாளர் தங்கதுரை, பொன்.பெருமாள்  உட்பட  எட்டுபேர் மீது தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யும் படி சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிக்ஸ் உத்தரவிட்டடார்.
அதனடிபடையில், தலைவாசல் ஒன்றிய துணை பொருளாளர் துரை கருப்பழகி என்பவரை 27.11.2012 அன்று காலையில் தலைவாசல் போலீசார் கைது செய்தனர்.
28.11.2012 காலை, சாலை மறியல் செய்தது, அவதூறாக பேசியவர்களை கைது செய்யவிடாமல் போலீசாரை தடுத்தது, உள்ளிட்ட பிரிவுகளில், கெங்கவல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுபா, மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் 14 பேர் மீது ஒரு வழக்கும், சாலைமரியல் எய்த மற்ற நூறு பேர் மீது ஒரு வழக்கும் பதுவு செய்துள்ளனர்.
இதனடிப்படையில், இன்று காலை சேலத்தில் கைது செய்யப்பட்டத் எஸ்.ஆர்.பாரத்திபன் மற்றும் சேலம் மாநகர தே.முதிக செயலாளர் ராதாகிருஷ்ணன் இருவரையும்  ஆத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
முன்னதாக, அடையாளம் கேட்டு எழுதுவதற்காக ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கொண்டுவந்து போலீசார் அவரது அடையாளங்களை கேட்டு எழுதினார்கள், அங்கு வந்த தொண்டர்களை அனுமதிக்காத போலீசாரை கண்டித்து சாலை மறியல் செய்த தேமுதிக வினர் 36 பேரை போலீசார் கைது செய்து ஆத்தூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

ad

ad