புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012


புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்களை கே.பி வெளியிட்டுள்ளார்: திவயின
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்து விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் போது இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளன.
கனடா, சுவிட்சர்லாந்து, மலேசியா, பிரிட்டன்,நோர்வே, சுவீடன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் காணப்படும் சொத்துக்கள் பற்றிய விபரங்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளார்.
அதிகளவான சொத்துக்கள் கனடாவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்பொருள் அங்காடிகள், வாகன விற்பனை நிலையங்கள், குத்தகை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் புலிகள் பணத்தை முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ad

ad