புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012

]
யாழ்ப்பாணத்தில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் 10 பேர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தந்து, குறித்த நபர்களை அழைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுவரை 7 பேர் தொடர்பிலேயே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கோப்பாயைச் சேர்ந்த 5 பேரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 2 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட குறித்த நபர்களின் உறவினர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது, குறிப்பிட்ட கைதுகளுக்கும் தமக்கும் எந்தவகையான தொடர்புகளும் இல்லையெனவும் தம்மால் எதுவும் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு விசாரணைகளுக்கென பொலிஸாரினால் ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வன்னியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் புனர்வாழ்வளிக்கபட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞர்களுடைய குடும்பத்தவர்களுக்கு இவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என துண்டு ஒன்றினை வழங்கியுள்ளார்கள்.

ad

ad