புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012

"தலைவர் பிரபாகரன் வருவார் என்கிற நம்பிக்கையில் ஒரு கிராமம்"
=========================
புலியூர் குடியருப்பாளர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு வாழும் இருப்பாக உள்ளனர்கடந்த செவ்வாய் மாலையில் மிகவும் நேரம் கழித்து, 100 பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட சுமார் 400 க்கும் மேற்பட்ட மக்கள் சேலம் மாவட்டத்திலுள்ள அதிகம் பிரசித்தமடையாத கிராமமாகிய புலியூரில் ஒன்றுகூடி கடலுக்கு அப்பால் யுத்தம் செய்து உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் விதமாக மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்.ரீ.ரீ.ஈ) ஸ்ரீலங்காவிலிருந்து துடைத்தழிக்கப்பட்டு விட்டது, அனால் இங்குள்ள கிராமவாசிகளுக்கு புலிகள் ஒரு வாழும் இருப்பாகவே இன்னமும் உள்ளார்கள். அன்றைய தினம் புலியூர் பிரிவிலுள்ள பொன்னம்மான் நினைவு பேரூந்து தரிப்பிடத்தில் புலியூர், மேட்டூர் அணை, கொளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் கடந்த 21 வருடங்களாகச் செய்து வருவதைப் போலவே மூன்று தசாப்தங்களாக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இனப் போராட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்துடன் போரிட்டு மடிந்துபோன தமிழர்களை நினைவுகூரும் வகையில் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவண்ணம் வரிசையாக நின்றார்கள். அவர்கள் அந்த வீரர்களையும் மற்றும் தமிழீத்தையும் புகழ்ந்து பாடல்களைப் பாடினார்கள்

நவம்பர் 26, வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள். எல்.ரீ.ரீ.ஈ அந்த நாளுக்கு அடுத்த நாளை மாவீரர் தினமாக கொண்டாடுவது வழக்கம், அதன் தலைவரின் தலைமையின் கீழ் அந்த இயக்கம் இறந்துபோன அதன் அங்கத்தவர்களுக்கு அன்றைய தினம் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அந்த வழக்கத்தை புலியூர் மக்களும் பின்பற்றுவது மரபு. ஸ்ரீலங்கா தமிழர்களின் உரிமைகளுக்காக எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் போராடி தமது உயிரை அர்ப்பணித்தார்கள். அவர்களின் தியாகத்துக்கு நாங்கள் தலை வணங்குகிறோம், எனத் தெரிவித்தார் மேட்டூர் அணையை வதிவிடமாக கொண்ட 37 வயதான எஸ் கனகரத்தினம் என்ற பெண், அவர் தனது கணவர் முல்லைவேந்தனுடன் மாவீர் தின நிகழ்வுக்கு சமூகமளித்திருந்தார்.
 
ஈழத்துடனான அந்தக் கிராமத்தின் சந்திப்பு எல்.ரீ.ரீ.ஈ யினருக்காக ஒரு பயிற்சி முகாம் அந்தக் கிராமத்தில் 1983ம் ஆண்டு அமைக்கப்பட்டபோது ஆரம்பமானது. சுமார் 3 வருடங்களாக எல்.ரீ.ரீ.ஈ யின் லெப்.கேணல் பொன்னம்மானினால் 800 க்கும் மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் இந்த முகாமில் பயிற்றுவிக்கப்பட்டனர். 1983ல் 130 க்கும் மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் கும்பாரபட்டி கிராமத்தில் பயிற்சி பெற்றார்கள். இவர்களுக்கான பயிற்சி பொன்னம்மானினால் வழங்கப்பட்டது. கும்பாரபட்டி,கொளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களுக்கு அரிசி தானியங்கள் போன்றவற்றை வழங்கினார்கள். எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களும் பொதுமக்களுடன் கலந்து பழகி ஸ்ரீலங்காத் தமிழர்களின் நிலையை அவர்களுக்கு எடுத்து விளக்கியிருந்தார்கள். புலியூர் வாசியான பி.எஸ் பழனிசாமி என்பவர் கூறுகையில், அந்தப் பயிற்சிநெறி எனது பண்ணையில்தான் நடைபெற்றது,நான் பெரும்பாலான நாட்களை அவர்களுடனேயே கழித்துள்ளேன். அந்தப் பயிற்சி முகாமின் பின்னர்தான் இந்தக் கிராமத்தின் பெயர்கூட புலிகளின் ஊர் என்கிற அர்த்தத்தில் புலியூர் என மாற்றப்பட்டது. கிராமத்தின் பேரூந்து தரிப்பிடத்துக்கும் பொன்னம்மான் நினவாக பெயரிடப்பட்டது.
 
கிராமவாசிகளின் தகவல்களின்படி 1983 முதல் 1985 வரை மூன்று தொகுதி அங்கத்தவர்கள் புலியூரில் பயிற்சி பெற்றார்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டார்கள். “ நான் வழக்கமாக எல்.ரீ.ரீ.ஈ யினருக்காக உணவுப் பொருட்களை வாங்கி வருவது வழக்கம், மற்றும் மூன்று வருடங்களாக நான் அவர்களுடன் இருந்துள்ளேன். முகாமுக்கு பிரபாகரன் வருகை தந்தபோது அவரை நான் சந்தித்துள்ளேன். தனது அங்கத்தவாகளுக்கு உதவி செய்த பொதுமக்களை பிரபாகரன் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அங்கத்தவர்கள் தங்கள் பயிற்சிகளை நிறைவு செய்து பின்னர் கிராமத்திலிருந்து யுத்த களத்துக்கு அனுப்பப் படவிருந்தபோது அவர்களைக் காண்பதற்காக பிரபாகரன் புலியூர் வந்தார். எனத் தெரிவித்தார் கொளத்தூரை சேர்ந்த ஏ. பாலசுப்ரமணியம் என்பவர்.
 
பாலசுப்ரமணியம், பிரபாகரன் என்கிற மனிதர்மீதும் அவரது லட்சியங்கள்மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருந்ததால் தனது மகனுக்கு தம்பி பிரபாகரன் என்றே பெயரிட்டுள்ளார். தம்பிக்கு இப்போது 20 வயதாகிறது. அவரது வயதை ஒத்த அநேகர் யுத்தத்தில் கொல்லப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களின் நினைவாக அவர்களின் பெயர்களைக் கொண்டுள்ளனர்.
 
இந்தக் கிராமத்தவர்களுக்கு பிரபாகரனும் ஈழமும் வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமல்ல. உண்மையில் அந்தக் கிராமத்திலுள்ள பெரும்பாலானவர்கள் எல்.ரீ.ரீ.ஈயின் பெருந் தலைவர் பிரபாகரன் இன்னமும் உயிரோடுதான் உள்ளார், எந்த நேரத்திலும் போரை மீண்டும் ஆரம்பிப்பார் என நம்புகிறார்கள். “பிரபாகரன் உயிரோடுதான் உள்ளார் என்றே நாங்கள் நம்புகிறோம், மற்றும் உலகத்தின்முன் அவர் விரைவில் தோன்றுவார்” என்றார் பழனிசாமி.
‎"தலைவர் பிரபாகரன் வருவார் என்கிற நம்பிக்கையில் ஒரு கிராமம்"
=========================
புலியூர் குடியருப்பாளர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு வாழும் இருப்ப
ாக உள்ளனர்கடந்த செவ்வாய் மாலையில் மிகவும் நேரம் கழித்து, 100 பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட சுமார் 400 க்கும் மேற்பட்ட மக்கள் சேலம் மாவட்டத்திலுள்ள அதிகம் பிரசித்தமடையாத கிராமமாகிய புலியூரில் ஒன்றுகூடி கடலுக்கு அப்பால் யுத்தம் செய்து உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் விதமாக மெழுகுவர்த்திகளை ஏற்றினார்கள்.

ad

ad