புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012

 இலங்கையில் சுமுகமான நிலை இல்லை என்பதற்கான,பதற்றம் அதிகரித்து வருவதற்கான அறிகுறி என்று ஏஎவ்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், அரசுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்து யாழ்ப்பாணத்தில்போராட்டம் நடத்தினர். இது அங்கு
சுமுகமான நிலை இல்லை என்பதற்கான,பதற்றம் அதிகரித்து வருவதற்கான அறிகுறி என்று ஏஎவ்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசுக்கும்,அரச படையினருக்கும் எதிராக யாழ் பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ளூர் அரசியல்வாதிகளும் மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடபட்டனர்.

இது 2009ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை அரசுக்கு எதிராக இடம்பெற்ற மிகப்பெரிய போராட்டம் இது.

மாவீரர் தினத்தை நினைவு கூரும் திட்டத்தை முறியடிக்க, யாழ்.பல்கலைக்கழகத்தினுள் இராணுவத்தினர் நுழைந்து குழப்பியதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.

பொலிஸாரும் படையினரும் மாணவர்களைத் தாக்கியதாக நேரில் பாரத்தவர்கள் கூறும் குற்றச்சாட்டை இராணுவம் நிராகரித்துள்ளது என்றும் ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

ad

ad