புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012


தன் முயற்சியில் மனம் தளராத கமல்… விஸ்வரூபத்தை முதலில் டிவியில் வெளியிடுகிறார்!!

கமல் திட்டப்படி, விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!
சென்னை: விஸ்வரூபம் படத்தை முதலில் டிடிஎச் மூலம் டிவியில் வெளியிடுவதில் உறுதியாக நிற்கிறார் கமல்ஹாஸன். தனது இந்த முடிவை அவர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.
விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமையை முக்கியமான டிடிஎச் ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்ற டிடிஎச் நிறுவனங்களுடன் பேசி படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை கமலும் டிடிஎச் நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.
இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டிவிடி பிரச்சினை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.
டிடிஎச்சில் படம் வெளியாகி 8 மணி நேரம் கழித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல். கிடைக்கும் தியேட்டர்களில் இதை வெளியிடப் போகிறாராம். இதில் இன்னொரு நன்மை… முதலிலேயே படம் டிவியில் காட்டப்பட்டுவிடுவதால் பிளாக் டிக்கெட் பிரச்சினையும் இருக்காது.
டிடிஎச்சில் படம் வெளியிடும் தனது முடிவைத் தெரிவிக்க நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்தார் கமல். அங்கே சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரபல தயாரிப்பாளர்களிடம் தனது பிரச்சினையை விளக்கினார்.
தன் படத்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற உரிமை அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே உண்டு என்பதை மறைமுகமாக, ஆனால் அழுத்தமாகத் தெரிவித்துவிட்டு சென்றாராம் கமல்.

ad

ad